புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! ஒரு சவரன் 1.50 லட்சமாக விற்பனை!!
தற்போது இலங்கை நாட்டில் அதிக அளவு பணவீக்கம் நிகழ்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இத்தகைய பணவீக்கம் நிகழ்ந்தது. இதன் விளைவாக இன்று இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 254 விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு உள்ள நிலையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆபரண நகைகள் விலையும் அதிக அளவு உயர்ந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இலங்கை வரலாற்றிலேயே தங்கத்தின் விலை இவ்வாறு உயர்ந்து இருந்ததாக காணப்படவில்லை.
அந்த அளவிற்கு தங்கத்தின் விலை சவரனுக்கு அதிக அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி இலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ 1.50 லட்சமாக விற்பனை செய்யபட்டு வருகிறது.
இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலவாணி குறைந்ததால் தங்கத்தின் மதிப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பருப்பு 250 ரூபாய்க்கும், சர்க்கரை ஒரு கிலோ 215 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை ரூபாய் 300 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் மிகுந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
