Connect with us

இல்லத்தரசிகளுக்கு சோகத்தை கொடுத்த தங்கத்தின் விலை! சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு!!!

gold rate 00

Tamil Nadu

இல்லத்தரசிகளுக்கு சோகத்தை கொடுத்த தங்கத்தின் விலை! சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு!!!

இல்லத்தரசிகளுக்கு சோகத்தை கொடுத்த தங்கத்தின் விலை! சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு!!!

எப்போதுமே மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருப்பது தங்கத்தின் விலை தான். ஏனென்றால் தங்கத்தின் விலை குறைவதை யை விட உயர்வதே அதிகமாக காணப்படும். அதுவும் குறிப்பாக ரஷ்ய போரின் பின்பு தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

உயர்ந்த அடுத்தநாளே தங்கத்தின் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 504 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 75 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4813 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போரின் பின்பு  தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ 1.10 உயர்ந்து, அங்கு வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top