ஒரே நாளில் ஐயாயிரத்தை தாண்டி அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை…!

ரஷ்ய போருக்குப்பின் நம் தமிழகத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக இன்று காலை சென்னையில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5-ஆயிரத்தை தாண்டும் என்று நிபுணர்கள் கூறும் கருத்து தெரிவித்திருந்தது.

அதன்படி தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 650 விலை உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ 650 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5-ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 5055க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ 40 ஆயிரத்து 440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தங்கம் ஒரே நாளில் கிராம் 85 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 1.80 காசு உயர்ந்துள்ளதாகவும் காணப்படுகிறது. இதனால் சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 75.20 க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment