சரசரவென்று உயர்ந்தது தங்கத்தின் விலை; சவரனுக்கு ₹103 உயர்வு!

நாம் தினந்தோறும் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சென்னையில் வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்கப்படுவதாக காணப்படுகிறது.

தங்கம்

நேற்று மாலை நேரத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை கணிசமாக இருந்தது.அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது இன்று காலமே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுவது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 104 உயர்ந்து, 36216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிராம் ஒன்றுக்கு சென்னையில் ரூபாய் 4527 க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 69.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment