சரசரவென்று அதிகரித்தது தங்கத்தின் விலை! சவரனுக்கு எவ்வளவு விலை உயர்வு தெரியுமா?

பொதுவாக விலை நிலை இல்லாத பொருள் எது என்று கேட்டால் பலரும் சொல்வது தங்கத்தை தான். ஏனென்றால் தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நிலையில் நாம் தினம்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை அறிந்து கொண்டு வருகிறோம்.

 தங்கத்தின் விலை

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் தங்கத்தின் விலை மிக உயர்ந்துள்ளது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 224 உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக சென்னையில் தங்கத்தின் விலை சவரன் மற்றும் கிராமில் பெரும் மாற்றம் உருவாகியுள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 448 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4556-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் வர்த்தகர்கள் என பலரும் சோகத்தில் உள்ளனர். அதோடு சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி  66.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment