சரசரவென்று உயர்ந்தது தங்கத்தின் விலை; சவரனுக்கு 344 ரூபாய் அதிகம்! அதிருப்தியில் வர்த்தகர்கள்; சோகத்தில் இல்லதரசிகள்!!

நாம் நாள்தோறும் தொடர்ச்சியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதன்படி இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்ததாக காணப்படுகிறது.

gold rate 1200

நேற்றைய தினம் சிறிதளவு உயர்ந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று அதிகமாகவே உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் இன்றைய தினம் சென்னையில் கிராம் ஒன்றுக்கு தங்கத்தின் விலை ரூபாய் 4 ஆயிரத்து 511 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து உள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 65.50 காசுக்கு விற்பனை செய்யபடுகிறது.இதனால் வர்த்தகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment