Connect with us

சரசரவென்று சரிந்தது தங்கத்தின் விலை! அள்ளிச் செல்ல காத்திருக்கும் இல்லத்தரசிகள்!!

gold rate 00

News

சரசரவென்று சரிந்தது தங்கத்தின் விலை! அள்ளிச் செல்ல காத்திருக்கும் இல்லத்தரசிகள்!!

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விலை உண்டு. அந்த விலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கருதுவது தங்கமாகும். ஏனென்றால் தங்கத்தின் விலை எப்போதும் நிலையில் இருக்காது.

gold rate 1200

இந்தநிலையில் நாம் நாள்தோறும் தலைநகர் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்றைய தங்கத்தின் விலை சற்று குறைவாக காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 488 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 35 ஆயிரத்து 904 ரூபாய்க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் வெள்ளியின் விலையும் சற்று மாற்றம் காணப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ 66.30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தினம் தங்கத்தின் விலை மிகவும் குறைந்து காணப்படுவதால் பெரும்பாலானோர் இன்றைய தினம் தங்கத்தை வாங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top