ஒரு கிராமுக்கே 30 ரூபா அதிகமா? ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! அதிருப்தியில் மக்கள்;

நாம் தினந்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் குறைந்து காணப்பட்டது.

gold rate 00

ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு காரணமாக ஒரு சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 304 விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர். இந்த விலை உயர்வின் காரணமாக சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து காணப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4538க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 65.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment