தங்கத்தின் விலை இவ்வளவு குறைவா? குஷியில் மக்கள்; அள்ளிச் செல்ல காத்திருக்கும் இல்லத்தரசிகள்!

பொதுவாக அனைத்துப் பொருள்களுக்கும் விலை நிர்ணயித்து விடலாம். ஆனால் தங்கத்திற்கு விலை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் தங்கத்தின் விலை தினம்தோறும் ஏற்ற இறக்கமாகவே காணப்படும்.

தங்கத்தின் விலை

இந்த நிலையில் நாம் நாள்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் வரை குறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 554 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை வீழ்ச்சி சவரனிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65.20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பண்டிகை காலத்தில் இத்தகைய விலை வீழ்ச்சி பலருக்கும் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment