
தமிழகம்
சற்றே குறைந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்
உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இந்த சுழலில் கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. குறிப்பாக நேற்றைய தினத்தில் மட்டும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன் படி, சென்னையில் ஆரணத்தங்கத்தின் ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 4, 774 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ. 38, 192 ஆக விற்பனையாகிறது.
அதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 5,209 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 8 ரூபாய் குறைந்து 41, 672 ஆக விற்பனையாகிறது.
மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் 68.50 காசுகளாகவும் ஒரு கிலோ 68 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
