வரலாற்றின் உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை !! ஒரு சவரன் 2 லட்சமா ?

இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் பொருளாதர நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை , அத்தியாவசிய பொருட்களின் விலை போன்றவை  தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இதனால் அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமர் பதவி விலகினால் மட்டுமே பொருளாதார நிலையை சரி செய்ய முடியும் என பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் படி, இதற்கு முன்னர் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment