மலைபோல் குறையும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்..!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையான மளமளவென குறைந்து காணப்படுகிறது.

இதனிடையே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனமழை எதிரொலி: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு ரூ.49 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,116-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து கிராம் வெள்ளி 60.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.60.50 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

மாணவி மரணம்: சதீஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

மேலும், பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்து காணப்படுவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment