என்ன ஒரு ஆச்சரியம்! தொடர்ந்து தங்கத்தின் விலை வீழ்ச்சி; மக்கள் மகிழ்ச்சி!

தத்தளிக்கும் தலைநகரமான சென்னை மாநகரில் உள்ள மக்களுக்கு தற்போது மிகுந்த சந்தோஷம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தொடர்ந்து நாம் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை நாள்தோறும் அறிந்து கொண்டு வருகிறோம்.

தங்கம்

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை மிகவும் குறைந்ததாக காணப்படுகிறது.இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 136 குறைந்துள்ளது.

இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4617 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை சவரன் ஒன்றுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 136 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 60 85 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் முதல் தொடர்ந்து தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவை சென்னை மட்டுமின்றி இதர மாவட்டங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment