வரத்து குறைவு! பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

தமிழகத்தில் நிலவும் கடுமையான பனிபொழிவின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையின் சந்தையின் பூக்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கனமழை மற்றும் கடும் பனிபொழிவு காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பூக்களின் விலையானது உயர்ந்து காணப்படுகிறது.

குடிபோதையில் இளம்பெண் அட்ராசிட்டி… கேரளாவில் பயங்கரம்!!

குறிப்பாக ஒரே நாளில் ரூ.500 உயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் முகூர்த்தம் மற்றும் வரத்து குறைவாக காணப்படுவதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மலர்சந்தைக்கு பூக்கள் வருவது வழக்கம். இந்த சூழலில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலையானது ரூ.1300 முதல் ரூ.1500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பரபரப்பு விளக்கம்!!

அதே போல் ஜாதிமல்லி ரூ.520 ரூபாய்க்கும், முல்லை ரூ.758 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ.600, சாமந்தி ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.100, அரளி ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அடுத்த சில நாட்களிலும் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.