ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ₹1000! தமிழக அரசு விலை நிர்ணயித்த உத்தரவு!!

இந்திய அளவில் பல ஆறுகள் காணாமலேயே போய்விட்டன. அதற்கு காரணம் ஆற்றுமணல் கொள்ளை அடிப்பதே தான். ஏனென்றால் ஒரு ஆறு ஓடுவதற்கு பக்கபலமாக அமைவது அந்த ஆற்றின் மணல் தான். ஆற்றின் மணலை சுரண்டுவது அதிகரித்தால் இறுதியில் ஆறு இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விடும்.

நேற்றைய தினம் இதனை தடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். அதன்படி மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ஆயிரமாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு யூனிட் மணலுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து மக்களுக்கு விற்க முடிவு செய்து வழிமுறை விடப்பட்ட நிலையில் இத்தகைய அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முறைகேடு ஏற்படுவதை தடுக்க 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் ஆற்று மணல் விற்பனை கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை, எளிய மக்கள் காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பித்து மணல் பெறலாம் என்றும் நேற்றையதினம் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment