5000 ரூபாயை கடந்தது சிலிண்டர் விலை….!! சொன்னபடி விலை உயர்வு-திண்டாடும் மக்கள்;
தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு அடுத்தடுத்த உதவிகளை இலங்கைக்கு செய்து கொண்டு வருகிறது. இருப்பினும் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகமாகவே காணப்படுகிறது.
குறிப்பாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 250 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்து வாகன ஓட்டிகளுக்கு திக்குமுக்காட வைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் திடீரென்று சிலிண்டர் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது.
அதன் படி இலங்கையில் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 5175 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாகவே லிட்ரோ நிறுவனம் ரூபாய் 2000 வரை சிலிண்டரின் விலை உயரும் என்று எச்சரித்து இருந்தது.
ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு முதல் பொது மக்களுக்கு மானிய விலையில் லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை வழங்கி வருவதால் கடந்த ஆண்டு மட்டும் ரூபாய் 1100 கோடி இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தால் அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட உள்ளதாகவும் கூறியுள்ளது. எனவே தற்போது சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
