விலை உயரலாம் அதுக்குன்னு இப்படியா? பரிதவிக்கும் இல்லத்தரசிகள், வர்த்தகர்கள்!!

கடந்த சில மாதங்களாகவே நம் தமிழகத்தில் அனைத்து விதமான பொருள்களின் விலையும் உயர்ந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தினம்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.

அதன் வரிசையில் தற்போது தங்கமும் இணைந்துள்ளதாக தெரிகிறது. தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படும். ஆனால் சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை திடீரென்று 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது பலரும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்து 224 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் கிராம் கணக்கில் ஆபரணத்தங்கம் ஆறு ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 69 ஆயிரத்து 500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment