News
அனுமன் படத்தை பதிவு செய்து பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய பிரேசில் அதிபர்
இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு ஊசி இந்திய மக்களுக்கு கடந்த சில நாட்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சில நாடுகளுக்கு வர்த்தக ரீதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டிற்கு சமீபத்தில் இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அனுப்பியது இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பிரேசில் அரசு இந்திய அரசுக்கு நன்றி செலுத்தியுள்ளது
அதுமட்டுமின்றி பிரேசில் அதிபர் தனியாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்கியதை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் அனுமன் படத்தை பதிவு செய்து பிரதமர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்
சஞ்சீவி மூலிகையை கொண்டு சென்று கொடுப்பது போல் பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை கொடுத்துள்ளார் என்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
The honour is ours, President @jairbolsonaro to be a trusted partner of Brazil in fighting the Covid-19 pandemic together. We will continue to strengthen our cooperation on healthcare. https://t.co/0iHTO05PoM
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
