Connect with us

‘எனக்கு ஏன் கடன் கொடுக்கமாட்றீங்க’ துப்பாக்கி முனையில் மிரட்டிய சாமியார்…!

gun samiyar

தமிழகம்

‘எனக்கு ஏன் கடன் கொடுக்கமாட்றீங்க’ துப்பாக்கி முனையில் மிரட்டிய சாமியார்…!

திருவாரூர் அருகே மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார் ஒருவர் கடன் கேட்டு வங்கி ஊழியர்களை மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் திருமலைசாமி . இவரது மனைவி கடந்த சட்டமன்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் இந்த நிலையில் இடி மின்னல் சங்கம் என்கிற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இன்று குடவாசல் அருகே மஞ்சக்குடியில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து ஊழியர்களை மிரட்டியுள்ளார். இது குறித்த நேரலை வீடியோ பதிவை தனது முகநூல் பக்கத்தில் திருமலைசாமி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் நீண்ட காலமாக கடன் கேட்டு வரும் எனக்கு ஏன் கடன் கொடுக்கவில்லை எனக் கூறி வங்கியில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவது பதிவாகியுள்ளது. மேலும் வங்கி தரையில் அமர்ந்து சாமியார் புகை பிடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து  குடவாசல் போலீசார் தகவல் தெரிவித்த போது சாமியார் வங்கிக்குள் சென்று கடன் கேட்டு ஊழியர்களை மிரட்டி உள்ளார் துப்பாக்கியுடன் வந்ததால் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் இன்று இரவுக்குள் சாமியார் கைது செய்யப்படுவார் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ முகநூல் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top