இபிஎஸ் ஏற்றிய கொடி!! கம்பம் விழுந்து தொண்டர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தப்போது 100 அடி உயரத்தில் கொடி கம்பம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் காரணமாக கொடி கம்பம் முழுவதுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொடி கம்பத்தை சீரமைக்கும் பணி இன்று நடைப்பெற்றது.

ஸ்ரீமதி மரணம்! பெற்றோரை விசாரிக்க நேரிடும்.. ஐகோர்ட் எச்சரிக்கை!!

அதன் படி, ராட்சத கிரேன் மூலமாக கீழே இருக்கும் போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்துள்ளது. அப்போது அதிமுக தொண்டர் மீது பலமாக கொடிகம்பம் விழுந்துள்ளது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மதுராங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்ரத்தா கொலை வழக்கு… போலீசார் புதிய தகவல்!!

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.