தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த காரணத்தினால் ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கில் சென்று பார்த்தனர்
இதன் காரணமாக இந்த திரைப்படம் 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி என்ற வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று மாலை 6 மணியை நோக்கி விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இரண்டு வாரங்கள் ஆகியும் ஒருசில திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியாகவும் ஒருசில திரையரங்குகள் கூட்டம் இல்லாத காரணத்தில் காட்சி ரத்தும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Pay attention, listen to me. ????
Kutti Story official video song releasing today at 6PM! ????
Stay tuned! #KuttiStoryVideoSong #KuttiStory #Master— XB Film Creators (@XBFilmCreators) January 23, 2021