வானில் பறந்த விமானம்… திடீரென தரையிறக்கப்பட்டதால் பீதியில் பயணிகள்!!

கோவை விமான நிலையத்தில் தனியார்  விமானம்  ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தரையிரக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூரில் இருந்து மாலி நாட்டிற்கு இந்த விமானம் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது என்ஜின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அலாரம் அடித்ததாக தெரிகிறது. இதனால் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வினாம நிலையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் அலாரம் பழுது அடைந்ததின் காரணமாக ஒலி எழுந்ததாக முற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதோடு விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லையென தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவை விமான நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு மாலி நாட்டிற்கு 92 பயணிகளுடன் விமானம் செல்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment