பிரதமருக்கு முன்னாடி முதலமைச்சர் போட்ட திட்டம்? நாளைய தினம் ஆலோசனை!!
திடீரென்று நம் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் மீண்டும் பிறப்பிக்கப்படுகின்றன.
அதுவும் குறிப்பாக தமிழகத்தில் முக கவசம் அணிந்து வெளியே செல்லாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு குறித்து நாளைய தினம் தமிழகம் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
