11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: பொதுத்தேர்வு ரத்து செய்ய திட்டம்!

தமிழகத்தில் முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெறும். இதனால் பெருவாரியான தனியார் பள்ளியில் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பனிரெண்டாம் வகுப்பிற்கான பாடத்தினை நடத்துவர். ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் பெரிய அளவில் பதினோராம் வகுப்பு பாடத்தினை ஆசிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இதனால் உயர்கல்விக்கு படிக்கப்போகும் மாணவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நுழைவுத்தேர்வில் பெரும் அளவு சிரமப்படுகின்றனர். ஏனென்றால் அந்த நுழைவுத் தேர்வில் 11ஆம் வகுப்பு பாடத் திட்டங்களில் உள்ள கேள்விகளும் கேட்கப்படும். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இனி பதினோராம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இத்தகைய அறிவிப்பு இந்த ஆண்டு ரத்து  செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி கூறினார்.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொது தேர்வு எழுதுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆயினும் இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பப்பட்டு முதல்வரின் ஒப்புதல் கிடைத்தபின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment