ஷிப்டு முடிஞ்சிடுச்சு விமானத்தை இயக்க முடியாது நான் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொன்ன பைலட்.. கடுப்பான விமான பயணிகள்
சவுதி அரேபியாவில் விமான பயணி ஒருவர் ஷிப்டு முடிந்ததாகக் கூறி விமானத்தை இயக்க மறுத்த நிலையில் பயணிகள் போராட்டம் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
அதாவது ஜனவரி 16 ஆம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நோக்கி கிளம்பியது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை மோசமானதை அடுத்து சவுதி விமான நிலையத்தின் அனுமதி பெற்று பைலட் விமானத்தை தரையிறக்கினார்.
அதன்பின்னர் வானிலை சரியான பின்னர் விமானம் இஸ்லாமாபாத் கிளம்பும் என்ற அறிவிப்பு வெளியாக பயணிகள் சில மணி நேரமாக விமானத்தில் பொறுமையோடு உட்கார்ந்து இருந்தனர்.
ஆனால் நேரம் போக போக வானிலை ஒருபுறம் சரியாகாமல் இருந்தநிலையில் பைலட் ஷிப்டு முடிந்துவிட்டதாகக் கூறி கிளம்பி உள்ளார்.
வெகு நேரமாக பொறுமை காத்திருந்த பயணிகள் பைலட் விமானத்தை இயக்கியே ஆக வேண்டும் நாங்கள் கீழே இறங்கமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
பயணிகளின் போராட்டம் விமான நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை விமானம் கிளம்பும் வரை ஹோட்டலில் தங்க வைத்து சமாதானம் செய்துள்ளனர்.
