தற்போது ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் நான்கு மாநிலங்களில் பாஜகவினர் முன்னணியில் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
இந்த தேர்தல் காங்கிரசுக்கு பெரும் இழப்பாக காணப்படுகிறது. ஏனென்றால் 5 மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தலில் எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் முன்னணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாக குறைந்துள்ளது.
இவ்வாறு விறுவிறுப்பாக உள்ளது பஞ்சாப் மாநில தேர்தல் களம். இந்த நிலையில் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாகவே பஞ்சாபில் பதவியேற்கவுள்ள முதல்வர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதன்படி பஞ்சாபில் இனி அரசு அலுவலகங்களில் முதல்வரின் படம் இருக்காது என்று முதல்வராக பதவி ஏற்க உள்ள பகவத் மான் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனுக்கு பதிவில் ஒரு கிராமத்தில் நடைபெறும் என்றும் பகவான் கூறியுள்ளார்.