
செய்திகள்
ஒரே குழப்பமா இருக்குதே? சீரான வேகத்தில் பயணிக்கும் பெட்ரோல்.!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் பிரச்சனையாக கடந்த சில நாட்களாக மாறியிருந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகும். ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்எரிவாயு விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதனால் மக்கள் பலரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் விலையானது 110 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வாகன ஓட்டிகள் இடையே பெரும் சங்கடத்தை உண்டாக்கியது.
இதனை அறிந்த அரசு உடனடியாக பெட்ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைத்து அறிவித்தது. அந்த விலை குறைப்பானது கடந்த 59 நாட்களாக அதே விலையில் விற்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதன்படி சென்னையில் 59வது நாட்களாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102. 63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதால் டீசல் ரூபாய் 94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் விலை உயரலாம் என்று அச்சத்தோடு பயணித்துக் கொண்டு வருகின்றனர்.
