நாகையில் பெட்ரோ கெமிக்கல் திட்டம் இனி இல்லை! வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் காணப்பட்டது. அதன் பின்னர் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள், இளைஞர்கள் என அனைவரும் கைகோர்த்து போராடினர்.

தமிழக அரசு

அதன் வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் திட்டம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அந்த திட்டத்தை தற்போது வாபஸ் செய்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நாகையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோகெமிக்கல் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

நாகை பெட்ரோலிய தொழில் மண்டலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய தொழில் மண்டலம் அமைக்க பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது.

எதிர்ப்பு எழுந்த நிலையில் நாகை பெட்ரோலிய தொழில் மண்டல திட்டத்தை ரத்து செய்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு இவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிஆர் பாண்டியன்

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பெட்ரோகெமிக்கல் திட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிஆர் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment