காதலுக்கு எதிர்ப்பு!!! காதல் ஜோடி செய்த விபரீத செயல்!!!

கடந்த சில நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  திருத்துறைப்பூண்டி அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அம்மளூர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்தரனும். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இவர்களுடைய காதலுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பம் குறித்து தகவலறிந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment