பொதுக்குழுக்கு சென்றவர் பொது வழியில் மரணம்!! அதிமுகவில் அதிர்ச்சி;

நேற்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுக்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமியின் 14 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

மேலும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் பொதுக்குழுக்காக சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதன்படி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பியபோது மதுராந்தகம் அருகே நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோத்துப்பாக்கம் பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கருரை சேர்ந்த செந்தில்குமார் உயிரிழந்துள்ளார். மேலும் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.