பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய நபர்… இப்படியுமா செய்வாங்க?

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவாங்களா என கூறுவார்கள் அல்லவா அமெரிக்காவில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. ஆனால் மூட்டைப்பூச்சிக்கு பயந்து அல்ல பாம்புக்கு பயந்து. ஒரு பாம்பிற்காக வீட்டை கொளுத்துவார்களா என்று தானே கேட்கிறீர்கள்.

எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று பார்க்கலாம் வாங்க. அமெரிக்காவில் உள்ள பூல்ஸ்வில்லேயில் அதிக விஷ பாம்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அங்கு வீடுகளுக்குள் விஷ பாம்புகள் நுழைவதெல்லாம் சாதாரணம். அப்படி தான் ஒரு நாள் விஷ பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பாம்பை விரட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருப்பதை மறந்து பாம்பை விரட்டுவதற்காக நெருப்பு புகையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக வீட்டில் உள்ள பொருட்களில் தீ பற்றிக் கொண்டதால் வீடு முழுவதும் எரியத் தொடங்கியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து உள்ளனர்.

இதில் என்னவொரு ஆச்சிரயம் என்றால் இந்த தீ விபத்திலும் வீட்டிற்குள் புகுந்த பாம்பின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையாம். அந்த பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர் அதனை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

பாம்பு உயிருக்கு எந த ஆபத்தும் இல்லை. ஆனால் வீடு தான் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்நிலையில் இதனால் உரிமையாளர் சோகத்தில் மூழ்கியுள்ளார். ஒரு பாம்பை விரட்ட நினைத்து அநியாயமாக வீட்டை இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment