மூர்ச்சையான குரங்கிற்கு மூச்சை கொடுத்து காப்பாற்றிய நபர்… குவியும் பாராட்டுக்கள்…..

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகம் பொதுவான ஒன்று தான். நாம் எப்படி இந்த பூமியில் வாழ்கிறோமோ அதேபோல விலங்குகளும் வாழ தகுதியானவர்கள் தான். ஆனால் மனிதர்களின் உயிருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஏனோ விலங்குகளின் உயிருக்கு அளிக்க தவறிவிடுகிறோம்.

அவைகளும் ஒரு உயிர் தானே என்று கருதும் மனிதர்கள் சிலர் மட்டுமே. அப்படிப்பட்ட சில மனிதர்களால் தான் இன்றும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மூச்சு நின்ற குரங்கு ஒன்றிற்கு தன் மூச்சை அளித்து ஒரு நபர் உயிர் கொடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓதியம், சமத்துவபுரம் பகுதியில் குரங்கு ஒன்றை நாய்கள் கண்டித்துள்ளது. இதில் பயந்துபோன குரங்கு அதிர்ச்சியில் மயக்கமடைந்துள்ளது. இதனை கண்ட கார் ஓட்டுனர் பிரபு என்பவர் குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் குரங்கு எழுந்திருக்காததால் பிரபு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தாமதிக்காமல் உடனே குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியும், வாயோடு வாயைவைத்து மூச்சை செலுத்தியும் முதலுதவி செய்த பிரபு, உடனடியாக பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு குரங்கை கொண்டு சென்று அனுமதி செய்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் குரங்கு நலமடைந்தது.

இதனையடுத்து குரங்கை வனப்பகுதியில் விட முடிவு செய்த பிரபு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் குரங்கை ஒப்படைத்துள்ளார். ஒரு குரங்கு தானே என அலட்சியம் காட்டாமல் சட்டென வாயோடு வாய் வைத்து மூச்சு வழங்கி முதலுதவி அளித்து குரங்கின் உயிரை காப்பாற்றிய பிரபுவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment