ஆன்லைன் ரம்மியால் பரிதாபம்; பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை….!!

தற்போது ஆன்லைன் விளையாட்டுக்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த ஆன்லைன் விளையாட்டுகள் பல நேரங்களில் பணத்தை முதலீடு செய்து விளையாடுவது போல காணப்படுகிறது.

அவற்றுள் ஒன்றுதான் ஆன்லைனில் ரம்மி. இந்த ஆன்லைன் ரம்மியில் தமிழகத்தில் ஏராளமானோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பலரும் இதில் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதனால் பணத்தை இழந்தவர்கள் துயரத்தை தாங்காமல் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் ஆன்லைனில் பணம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. சென்னை அருகே போரூர் விக்னேஸ்வரா நகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடன் வாங்கி ஒரு 15 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் பிரபு என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment