அதிர்ச்சி சம்பவம்..! மோமோஸ் சாப்பிட்டதால் உயிரிழந்த நபர்;;

தெற்கு டெல்லியில் 50-வயது முதியவர் ஒருவர் மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது உணவுக் குழாயில் மோமோஸ் சிக்கியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை எய்ம்ஸ் அறிக்கையில் தெரிவித்து இவ்வகை மரணங்கள் 12 லட்சத்தில் ஒருவர் மட்டுமே நடப்பதாக கூறியிருந்தது.

இதனிடையே உணவு சாப்பிடும்போது அனைவரும் கொஞ்சம், கொஞ்சமாக உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் அவசரமாக சாப்பிடக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு பழங்கள் மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை அரைத்த, மசித்த அல்லது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் தெரிவிக்கின்றனர்.

மேலும், மோமோஸ் சாப்பிட்டு 50-வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment