Connect with us

எவ்வளவு சொல்லியும் கொரோனாத் தடுப்பூசி போடாத நபர்.. இதய அறுவை சிகிச்சை செய்ய மறுத்த அமெரிக்க மருத்துவமனை

Untitled 132

செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கொரோனாத் தடுப்பூசி போடாத நபர்.. இதய அறுவை சிகிச்சை செய்ய மறுத்த அமெரிக்க மருத்துவமனை

எவ்வளவு சொல்லியும் கொரோனாத் தடுப்பூசி போடாத நபர்.. இதய அறுவை சிகிச்சை செய்ய மறுத்த அமெரிக்க மருத்துவமனை

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியினை இதய நோயாளி போட்டிராததைக் காரணம் காட்டி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவமனை கூறியது அமெரிக்காவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையானது உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மாதம் இதய நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்த அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவகள் கூறி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த நபரின் பெயரானது அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் இதய மாறறு அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதையொட்டி கொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரியுள்ளது மருத்துவமனை.

ஆனால் அவர் தடுப்பூசி போடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார், மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் அந்த நபர் தன் கொள்கையில் இருந்து பின் வாங்கவேயில்லை.

இதனால் மருத்துவர்கள்  அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் இருந்து அந்த நபரை நீக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் வேறொரு மருத்துவமனையில் அவரைச் சேர்க்கும் பணியில் மும்முரமாகக் களம் இறங்கியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top