Connect with us

வெறும் 60,000 ரூபாயில் பழைய பொருள் கொண்டு காரை வடிவமைத்த நபர்.. பாராட்டி பொலேரோ கார் பரிசளித்த மஹேந்திரா நிறுவனம்!

Untitled 133

செய்திகள்

வெறும் 60,000 ரூபாயில் பழைய பொருள் கொண்டு காரை வடிவமைத்த நபர்.. பாராட்டி பொலேரோ கார் பரிசளித்த மஹேந்திரா நிறுவனம்!

வெறும் 60,000 ரூபாயில் பழைய பொருள் கொண்டு காரை வடிவமைத்த நபர்.. பாராட்டி பொலேரோ கார் பரிசளித்த மஹேந்திரா நிறுவனம்!

பழைய பொருட்களைக் கொண்டு வெறும் 60,000 ரூபாய் செலவில் கார் ஒன்றினை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் தயார் செய்ததைப் பாராட்டும் வகையில் மஹிந்திரா நிறுவனம் அவருக்குக் கார் பரிசளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவர் தத்தாரியா லோகர், இவர் தேவராஷ்டிரா என்ற கிராமத்தைச் சார்ந்தவர், இவர் அதே ஊரில் தச்சராக வேலை செய்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளாக கார் ஒன்றினை வடிவமைக்க ஆசை கொண்டு இருந்துள்ளார், அந்தக் கனவினை நனவாக்கும் பொருட்டு கடந்த ஒரு ஆண்டாக அதற்கான முழு முயற்சியில் இயங்கியுள்ளார்.

எப்படியாவது காரினை வடிவமைக்க எண்ணி, பழைய பொருட்கள் பலவற்றினைக் கொண்டு அவருக்குப் பிடித்தமான காரினைத் தயாரித்துள்ளார்.

அந்தக் காரினை வடிவமைக்க அவருக்கு 60,000 ரூபாய் செலவு ஆகியதாம். லோகர் வடிவமைத்த இந்தக் கார் குறித்து மஹேந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹேந்திரா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

லோகர் தயாரித்த காரானது சாலை விதிகளுக்கு அப்பாற்பட்டுத் தயாரிக்கப்பட்டதாக உள்ளதால் அரசு அதிகாரிகள் இதனை சாலையில் செல்ல அனுமதி மாட்டார்கள் என்று ஆனந்த் மஹேந்திரா கூறியுள்ளார்.

மேலும் லோகர் வடிவமைத்த காரை வாங்கிவிட்டு அவருக்கு பொலேரோ கார் ஒன்றினைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top