நெதர்லாந்து: மீண்டும் ஊரடங்கா? பொங்கி எழுந்த மக்கள்! தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!!

2019 ஆண்டுக்குப் பின்னர் உலகமெங்கும் ஊரடங்கு என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு உலகில் முதன்முதலாக கொரோனா காலடி வைத்தது. இதன் தாக்கம் இன்றுவரை குறையாமலே காணப்படுகிறது. குறிப்பாக மேலை நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் அனைத்து நாடுகளிலும் மெல்ல மெல்ல பரவி கொண்டு வருகிறது

இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கும் முறையை கையில் எடுத்துள்ளது. ஆயினும் பொதுமக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆச்சரியமான தகவலாக காணப்படுகிறது. அதன்படி நெதர்லாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சுறுத்தலால் நெதர்லாந்தில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு ஜனவரி 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெதர்லாந்தில் உணவகம், சலூன் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment