12 அடி நீள மலைபாம்பை பிடிக்க போராடும் மக்கள்… இணையத்தில் வைரல்

கிருஷ்ணகிரி அருகே  விளை நிலத்தில் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்திய 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை கிராம மக்கள் போராடி லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்மை காலமாக பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிக்குள் இருந்த மலைப்பாம்புகள் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது, இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள போத்திநாயனப்பள்ளி கிராமத்தில் விளை நிலத்தில் புகுந்து பயிர்கள் கோழி குஞ்சுகள் சேதப்படுத்தி  விவசாயிகளை அச்சுறுத்தி வந்த   மலைப்பாம்பால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வந்தது.

இந்த நிலையில் போத்தி நாயனப்பள்ளி கிராம மக்கள் விளை நிலத்திற்கு புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் உலா  வந்த மலைப்பாம்பினை பிடிக்க இன்று பெக்லைன் இயந்திரம் மூலம் மதி என்பவரின் நெற்பயிர் தோட்டத்தில் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அந்த மலைப்பாம்பை கிராம மக்கள் லாவகமாக பிடித்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் வரத்தால் கிராம மக்களே சுமார் 12 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பினை  மகராஜாகடை அருகே உள்ள நாரலப்பள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். கடந்த ஒரு வாரமாக விவசாயிகளை அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பை  கிராம மக்கள் போராடி பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment