
தமிழகம்
இன்று கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!! யார் தலைமையில் தெரியுமா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மத்திய அமைச்சரகம் சார்பில் ராஜ்நாத் சிங், ரகலாத் ஜோசி, பியூஸ்போகி ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ், திமுக சார்பில், டி.ஆர் பாலு, திருச்சி சிவா மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் சார்பில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 32 மசோதாக்கள் நிறைவேற்ற மத்தியரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விலைவாசி உயர்வு, அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட 13 முக்கிய பிரச்சனைகளை இக்கூட்டத்தில் எழுப்ப உள்ளதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
