
News
ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் முடிந்து, போலீஸ் ட்ரீட்மென்டுக்கு போனார் சங்கராபுரம் பட்டாசுக்கடை ஓனர்!
ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் முடிந்து, போலீஸ் ட்ரீட்மென்டுக்கு போனார் சங்கராபுரம் பட்டாசுக்கடை ஓனர்!
இன்னும் இரு நாட்களில் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் ஒவ்வொரு மாநிலமும் மும்முரமாக செய்து வருகிறது. தீபாவளி என்றால் அனைவருக்கும் நினைவு வருவது பட்டாசுகள் தான்.
இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் விறுவிறுவென்று ஓடிக் கொண்டுள்ளது. பட்டாசு கடை என்றாலே அனைவருக்கும் மிகுந்த அச்சம் காணப்படும்.ஏனென்றால் வெடியானது எப்போது வெடிக்கும் என்று தெரியாது என்ற பயத்தோடு அங்குள்ள பணியாளர்கள் இருப்பர்.
சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த காலையில் தமிழக அரசும் தங்களது கருத்தினை கூறியுள்ளது. தற்போது சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தின் காரணமாக பட்டாசு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி போலீசார் கைது செய்தது. இந்த பட்டாசு கடை அமைந்துள்ள கட்டிடம் குறித்தும் இன்று காலையில் தமிழக அரசு கூறியுள்ளது.
பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி மீது சங்கராபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது செல்வகணபதி கைது செய்யப்பட்டார்.
