ஆரஞ்சு தொப்பியும் எங்களுக்குத்தான்.! ஊதா தொப்பியும் எங்களுக்கு தான்..!! கெத்து காட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ்..!!!

தற்போது பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 10 அணிகள் உள்ளன. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெறும் ஆட்டத்தில் பல வீரர்கள் எதிர்பாராதவிதமாக தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி பெற தகுதியுள்ளவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆரஞ்சு நிற தொப்பி பெற முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக காணப்படுகிறார்.

அவர் 272 ரன்கள் எடுத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் . அதற்கு அடுத்தபடியாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 235 ரன்கள் எடுத்து இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத ஹார்திக் பாண்டியா உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா 228 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இதேபோல் ஊதா நிற தொப்பி பட்டியலில் 12 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் சாஹல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்தவர்.

அதற்கு அடுத்தபடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் 12 விக்கெட்டுகள் எடுத்த இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.