ஜெலன்ஸ்கியோடு பேசிய மோடி; போரை முடிவுக்கு கொண்டுவர மட்டும்தான் அனைத்து வழிகளிலும் உதவி!
உக்ரைன், ரஷ்யா போர் என்பது உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாலும் அதை விட இந்தியாவின் பதில் பலருக்கும் எதிர்பார்ப்பை கொடுத்தது. இந்த நிலையில் இந்தியா தற்போது வரை நடுநிலைமை வகித்து வருகிறது.
இருந்தாலும் நேற்றையதினம் ரஷ்ய அதிபரோடு பாரத பிரதமர் நரேந்திரமோடி தொடர்பு கொண்டிருந்தார். இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.
ஜெலன்ஸ்கியோடு நடத்திய பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய அனைத்து வழிகளிலும் உதவும் என்று உறுதி அளித்துள்ளார்.
