பாலிவுட்டில் பல ஜாம்பவான்கள் ஜொலித்துக் கொண்டு உள்ளனர். அவர்களில் முதல் வரிசையில் காணப்படும் நடிகர்களில் சல்மான்கானும் ஒருவர். சல்மான்கானுக்கு ஹிந்தி திரையுலகம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவற்றில் பல படங்கள் இவருக்கு வசூல் சாதனையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இவருக்கு நாளைய தினம் 56வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நடிகர் சல்மான் கான் பண்ணை வீட்டுக்கு சென்றிருந்தார்.
அங்கு எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஷமில்லாத பாம்பு ஒன்று தீண்டியது என்ற தகவல் கிடைத்துள்ளது. பாம்புக்கடிக்கு ஆளான நடிகர் சல்மான்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சல்மான் கான் நாளைய தினம் தனது 56 வது பிறந்தநாளை கொண்டாட பண்ணை வீட்டுக்கு சென்றபோது அங்கு விஷமில்லாத பாம்பு கடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.