3024 பாட்டில்களை கடந்தி சென்ற ஒரே ஆள்! அதிர்ச்சியடைந்த சோதனைச்சாவடி போலீஸ்!!

தமிழகத்தில் அதிகம் லாபம் தரும் தொழிலாக காணப்படுகிறது மதுபானம் விற்பனை. இதற்கு தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களும் கூட அடிமைகளாக உள்ளனர். இவ்வாறு இருப்பின் தமிழகத்தை விட மிகக் குறைந்த விலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானம் விற்கப்படும்.மதுபானம்

இதனால் புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்ட மக்கள் பெரும்பாலும் புதுச்சேரிக்கு சென்று மதுபானம் வாங்குவார். அதை வாங்குவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்.

இதனை தடுக்கும் வகையில் புதுச்சேரி-தமிழ்நாடு எல்லையில் பல்வேறு சோதனை சாவடிகள் காணப்படும். இதில் பலரும் சிக்குவார்கள். இந்த நிலையில் சோதனைச் சாவடி உள்ள போலீசாருக்கு மிகுந்த ஆச்சரியம் தரும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3024 மதுபாட்டில்கள் விழுப்புரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் கிளியனூர் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்தை கொந்தமூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

சிறிய ரக சரக்கு வாகன சோதனை செய்த போது அதில் 63 பெட்டிகள் இருந்தன. அந்த அறுபத்தி மூன்று பெட்டிகளில் 3024 மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தது.

3024 மதுபாட்டில்களை ஒரே ஒரு ஆள் கடத்திவந்தது சோதனையில் ஈடுபட்ட போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment