ஊரடங்கிற்கு ஒத்துழைக்கும் ஆம்னி பேருந்து சங்கம்; நாளைய தினம் ஆம்னி பேருந்து இயங்காது!
நம் தமிழகத்தில் தற்போது வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதே வேளையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் தமிழகத்தில் இந்த ஆண்டு இரண்டு முறை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளைய தினம் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இது 2022ஆம் ஆண்டில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மூன்றாவது முழு ஊரடங்கு ஆகும்.
இந்த நிலையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என்று அறிவித்திருந்தது. இன்று காலை தினம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவித்திருந்தது.
அதன் வரிசையில் தற்போது நாளைய தினம் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நியாயமான நாளைய தினம் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்காது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்றும் உரிமையாளர்கள் சங்கம் கூறியது.
