Connect with us

அம்மாடியோவ் 10 ஆயிரத்தை நெருங்கி விட்டதா ஒமைக்ரான்? மூன்று லட்சத்தை நெருங்கியது கொரோனா

corona

செய்திகள்

அம்மாடியோவ் 10 ஆயிரத்தை நெருங்கி விட்டதா ஒமைக்ரான்? மூன்று லட்சத்தை நெருங்கியது கொரோனா

அம்மாடியோவ் 10 ஆயிரத்தை நெருங்கி விட்டதா ஒமைக்ரான்? மூன்று லட்சத்தை நெருங்கியது கொரோனா

கடந்த சில நாட்களாக இந்தியா நோய் பிடிக்குள் சிக்கியுள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவால் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பேர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் என்ற புதிய வகை வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவிக்கொண்டு வருகிறது.

இவை தற்போது 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் இதுவரை 8 ஆயிரத்து 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதே வேளையில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்தியாவில் நேற்றைய தினம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 441 பேர் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 18 லட்சத்து 30 ஆயிரம் பேர் சிகிச்சையில்   உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top