இதுவரை பரவிய கொரோனாவை விட ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது!: அமைச்சர் சுப்பிரமணியன்;

மிகுந்த வீரியத்தோடு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளில் வேகமாக பரவி கொண்டு வருகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் பரவல் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

ஒமைக்கிரான்

இந்த நிலையில் ஒமைக்ரான் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.இதுவரை பரவிய கொரோனா பரவலை காட்டிலும் வகை ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது என்று அமைச்சர்  சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ராணிமேரி கல்லூரியில் தடுப்பூசி முகாமை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இத்தகைய தகவலை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இந்த ஒமைக்ரான்  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் முக கவசம் இரண்டுமே முக்கியமான தீர்வாகும் என்றும் கூறினார்.

நைஜீரியாவில் இருந்து வந்த நபர் மற்றும் அவரின் குடும்பத்தின் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றின் முடிவு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment