
செய்திகள்
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பியாட் போட்டி நடக்க வேண்டும்!!
அடுத்த மாதம் சென்னை மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான நாடுகள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை தாமதமின்றி வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டி நடைபெறுகிறது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தமிழக அரசு இணைந்து செஸ் போட்டியை நடத்துகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நேரடியாக ஒலிம்பியாட் தொடரை காண அனுமதி வழங்கப்படுகிறது. போட்டிகளில் நடத்துவதற்காக மாவட்ட வாரியாக தலா ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
