Connect with us

குலதெய்வத்துக்கு ஒத்துக்காது!! பட்டியலினத்தவருக்கு வீடு கொடுக்க மறுத்த மூதாட்டி!!

video

தமிழகம்

குலதெய்வத்துக்கு ஒத்துக்காது!! பட்டியலினத்தவருக்கு வீடு கொடுக்க மறுத்த மூதாட்டி!!

திண்டுக்கல் அருகே பட்டியலினத்தவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த மூதாட்டியின் வீடியோவானது வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த பகுதியில் கிருஸ்தவ ஆதி திராவிடர் ஒருவர் வாடகைக்கு வீடு கேட்க சென்றபோது, மூதாட்டி ஒருவர் தன்னிடம் என்ன சாதி?  வீடு தரமுடியாது என மறுத்த மூதாட்டின் வீடியோவானது வைரலாகி வருகிறது.

அதோடு எங்கள் குலதெய்வத்துக்கு ஒத்துக்காது.. இதன் காரணமாக வீட்டை வாடகைக்கு கொடுப்பதை பார்த்து கொடுக்க வேண்டும் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு அடிப்படையில் சாதி, தீண்டாமையின் காரணமாக வீடுகள் வாடகைக்கு தர மறுப்பது தொடர்கதையாகி வருகிறது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியல் இன பள்ளி குழந்தைகளுக்கு கடைகளில் திண்பண்டம் வழங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top