
தமிழகம்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி! மர்ம நபர்கள் செய்த கொடூர சம்பவம்;;
ஜோலார் பேட்டை அருகே 65 வயது மூதாட்டி நகைக்காக கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே மர்ம நபர்களால் கொடூர செயல்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய செயலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுவந்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் கோலார் பேட்டை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 65-வயது மூதாட்டி காந்தா. வீட்டில் தனியாக இருந்த காந்தாவை கழுத்து அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7 பவுன் செயின், 5 பவுன் வளையல் என மொத்தம் 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
